மூன்றாம் பிறை' என்று கமல், ஸ்ரீதேவி நடித்த படத்திற்கு ஏன் அந்த பெயரை வைத்தார்கள் என்று கூற முடியுமா?
இந்தப் படத்தின் தலைப்பு மூன்றாம் பிறை அருமையான ஒரு குறியீடு போன்ற சிறப்பான தலைப்பு. A symbolic title. மூன்றாம் பிறை என்பது மூன்றாம் நாள் தெரியக்கூடிய நிலவைக் குறிக்கிறது. புது நிலவு நாள் (No moon day)என்பது நிலவு வெறும் வெறும் கண்ணுக்குத் தெரியாத முதல் நாள் (அதாவது அமாவாசை ). ஒளி குறைந்த நாளும் கூட. சந்திரனும் சூரியனும் ஒரே longitude ல் வரும் நாளில் சந்திரன் கண்ணுக்கு தெரிவதில்லை. சூரியனின் ஒளி அதன் பின்புறத்தில் தெரிவதால் பூமியிலிருந்து பார்க்கும் போது முகப்பு இருள் அடைந்து தெரியும். இருள் சூழ்ந்த இந்த நிலையில் எப்போதுமே வளரும் புது நிலவை எதிர்பார்த்து காத்திருக்கும் நாளாக அமைகிறது. இதில் உள்ள சென்டிமென்ட் என்னவென்றால் இந்த நாள் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. சந்திரன் மனோகாரகன் என்பது இந்துக்களின் ஆருட ரீதியான நம்பிக்கை . (எட்டாவது வீட்டில் அஸ்தமனம் ஆகும் போது மனக்குழப்பம் ஏற்படும் என்பதெல்லாம ஜோதிட ரீதியான கணிப்பு) உலகெங்கிலும் மக்கள் நிலவு குறித்த பல்வேறு நம்பிக்கைகளை வைத்திருக்கிறார்கள். அதிலும் முக்கியமாக சந்திரன் மனோகாரகன் என்ற நம்பிக்கை உலகெங்கும் பரவலாக உள்ளது என்றே கூற வேண்டு...